"அதிமுகவின் வீழ்ச்சிக்கும் பிளவுக்கும் துணைபோக விரும்பவில்லை" - தவெகவில் இணைந்த பின் கடம்பூர் ராஜு  பேச்சு!

 

அதிமுகவின் தற்போதைய அரசியல் நகர்வுகள் தமக்கு மிகுந்த ஏமாற்றமளிப்பதாகக் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.  "கடந்த சில காலமாகவே அதிமுகவில் தொடர் தோல்விகள் என்பது மிகவும் சகஜமான ஒரு விஷயமாக மாறிவிட்டது. தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு கட்சியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை" என்றார்.

கட்சிக்குள் ஒற்றுமை நிலவுவதற்குப் பதிலாக, நாளுக்கு நாள் உட்கட்சிப் பிளவுகளும், தலைவர்களுக்கு இடையேயான மோதல்களும் அதிகரித்துக்கொண்டே செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை விட்டு வெளியேறியது சுயநலத்திற்காக அல்ல, அது ஒரு தவிர்க்க முடியாத முடிவு. "ஒரு பாரம்பரியமிக்க கட்சியின் வீழ்ச்சிக்கும், அதன் உட்கட்சிப் பிளவுகளுக்கும் நான் எந்த வகையிலும் துணைபோகக் கூடாது என்ற கடுமையான மனக்குமுறல் எனக்குள் நீண்ட நாட்களாக இருந்தது. அந்த ஒரு காரணத்திற்காகத்தான் தற்பொழுது அதிமுகவிலிருந்து விலகும் தீர்க்கமான முடிவை நான் எடுத்தேன்" என்றார்.