எந்த விஷயத்தையும் சரியாக பேச வேண்டும், அதனால் Prepare செய்து  வந்தேன்.. முதலமைச்சர் விஜய்  பளிச்!  

 

 

 

சட்டப்பேரவையில் இன்று செப்.7 அன்று முதலமைச்சர் விஜய் திமுகவுக்கு எதிராக ஆவேசமாகப் பேசி வருகிறார். அப்போது சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும்போது இடையூறு செய்வது சரியாக இருக்காது என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். எந்த ஒரு விஷயத்தைப் பேசும்போதும் சரியாகப் பேச வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதற்காகத் தயார் செய்து வருவதில் எந்தவிதமான தவறும் இல்லை என்றும் அவர் வெளிப்படையாகக் கூறினார். ஆமாம் நானும் முன் தயார் செய்துதான் பேசியுள்ளேன் என்று விஜய் குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் தனது உரைக்காக முன்கூட்டியே தயாராகி வந்ததை முதலமைச்சர் விஜய் வெளிப்படையாகத் தெரிவித்தது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.