"அன்னைக்கு போலீஸை நம்பி என் அக்கா, தங்கைகளை இழந்துட்டேன்” - முதல்வர் விஜய் ஆவேசம்!

 

கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாகத் தன் மீது விமரிசனங்களை முன்வைத்து வரும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

தன் மீதான பழிகளுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை மேடையில் வெளிப்படையாக உடைத்த முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியின் செயல்பாடுகளைப் பட்டியலிட்டார். "கரூர் விவகாரத்தில் என் மீது திட்டமிட்டுப் பழியைப் போட்டது முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அன்றைய தினம் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரை நான் முழுமையாக நம்பினேன். அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான், என் சொந்தக் குடும்பத்தைச் சேர்ந்த என் தங்கை, அக்கா மற்றும் பச்சைக் குழந்தைகளை நான் அங்கே இழக்க நேரிட்டது.

நான் கரூர் சென்றபோது கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகமாக இருக்கிறது, அங்கு செல்ல வேண்டாம் என்று கரூர் மாவட்ட காவல்துறை என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் அல்லவா? ஆனால், அவர்களோ தங்களது உள்நோக்கத்தை மறைத்து, எங்களை வற்புறுத்தி உள்ளே கூட்டிச் சென்றார்கள். அப்போது அவர்களின் சதித்திட்டம் எனக்குத் தெரியவில்லை. அது தெரியாமல் நானும் அந்தப் போலீசாருக்கு நன்றியெல்லாம் சொன்னேன்!"

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/nUEUl50AAF8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/nUEUl50AAF8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

"ஓடி ஒளிந்துவிட்டேன் என்று சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது?". விபத்து நடந்த பிறகு தான் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படும் விமரிசனங்களுக்கு மிகுந்த மனவேதனையுடன் விஜய் பதிலளித்தார்.

"என் சொந்தக் குடும்ப உறவுகளை இழந்து, அந்தப் பெருத்த வலியோடும் வேதனையோடும் நான் வீட்டில் முடங்கிக் கிடந்தேன். ஆனால், அந்த வலியோடு இருந்த என் மீது பழியைத் தூக்கிப் போடுகிறீர்களே? நான் பயந்து ஓடி ஒளிந்துவிட்டேன் என்று சொல்கிறீர்களே? வாய் என்று ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா?" என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

"மக்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய். நான் தீய சக்தி மாதிரி ரீல் தாய்மாமன் கிடையாது; மக்களின் கஷ்டங்களை உணர்ந்த ரியல் தாய்மாமன்" என்று முழங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து வீழ்த்த தொண்டர்களுக்கும் மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்:

"கரூர் சம்பவத்தில் நமக்கான இத்தனை வலிகளைத் தந்த அவர்களுக்கு, நடந்து முடிந்த 2026 தேர்தலில் நீங்கள் நல்ல அடியைக் கொடுத்து விட்டீர்கள். ஆனால், அது மட்டும் போதாது. அவர்கள் காலம் காலத்திற்கும் இனி அரசியலில் எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு, நிரந்தரமான ஒரு அடியை நீங்கள் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்."

"சட்டப்பேரவையில் நான் வெறும் 'பார்ட்டி பஃண்ட்' என்றுதான் சொன்னேன். எந்தக் கட்சியின் பெயர் என்று கூட நான் குறிப்பிடவில்லை. அதைச் சொன்னதுமே பயந்து நடுங்கி எடுத்தார்கள் பாருங்க ஒரு ஓட்டம்!" எனத் தன் உரையில் எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பை விமரிசித்துப் பேசினார்.