“திமுக - அதிமுக கூட்டணிக்கு யோசனை சொன்னதே நான்தான்” - தேமுதிக சுதீஷ் பரபரப்புத் தகவல்!

 

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்திய நிலையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஒன்றாக இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற யோசனையைத் தாமே முன்வைத்ததாகத் தேமுதிக நிர்வாகி எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் தேர்தல் முடிவுகள் எவருமே எதிர்பாராத வகையில்தான் அமைந்தன; ஏன், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம் என்று தவெக கூடச் நினைத்திருக்காது என அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின் நடைபெற்ற அறிவாலய ஆலோசனைக் கூட்டத்தில், "மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்க வேண்டும்" என்ற தனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்ற யோசனையைத் தாமே முன்வைத்ததாகத் தெரிவித்தார்.

இந்த யோசனையைக் கேட்டவுடன் கூட்டத்தில் இருந்த அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைந்ததாகவும், ஆனால் ஸ்டாலினோ "இது சரிவராது" என்று உடனடியாக அதனை மறுத்துவிட்டதாகவும் எல்.கே.சுதீஷ் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.