“என் சகோதரிகளை அவதூறாகப் பேசினால் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்” - பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

 

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து நடைபெற்ற ரோடு ஷோ மற்றும் வாகனப் பிரச்சாரத்தின் போது, தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் எதிர்க்கட்சிகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைப் பார்க்கும் ஆள் நான் கிடையாது; என் சொந்தங்களை நான் எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் போய் பார்ப்பேன், அதைப் பற்றி உங்களுக்கு கவலை எதற்கு?" என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் பேசிய பேச்சுக்களைச் சுட்டிக்காட்டிய அவர், காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்கு அவர்கள் தரப்பில் அவதூறுகள் பேசுவதைக் கடுமையாகச் சாடினார்.

"என்னைப் பற்றி நீங்கள் எது வேண்டுமானாலும் பேசுங்கள்; ஆனால், என் சகோதரிகளைப் பற்றியோ பெண்களைப் பற்றியோ அவதூறாகப் பேசினால் நான் சும்மா இருக்க மாட்டேன், ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டேன்" என அவர் எச்சரித்தார்.

மேலும், திமுகவும் அதிமுகவும் மறைமுகக் கூட்டு வைத்துள்ளதாகவும், யாருடன் கூட்டு சேரக்கூடாதோ அவர்களுடன் இணைந்து அதிமுகவினர் செயல்பட்டு வருவதாகவும் விஜய் தனது உரையில் குற்றஞ்சாட்டினார்.