கிரிக்கெட் போட்டிகளில் சிவப்பு பந்திற்குப் பதில் பிங்க் பந்து - ஐசிசி புதிய சோதனை முயற்சி!

 

கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்ட நேரம் வீணாவதைத் தவிர்க்கும் நோக்கில், பகல் நேர டெஸ்ட் போட்டிகளிலும் சோதனை அடிப்படையில் பிங்க் பந்துகளைப் பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

பகல் நேர டெஸ்ட் போட்டிகளின் போது வெளிச்சக் குறைபாடு காரணமாக ஆட்டம் தடையாவதைத் தவிர்த்து, நேர விரயத்தைக் குறைப்பது இதன் முக்கிய நோக்கமாகும். இந்த முடிவானது போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே களமிறங்கும் இரு அணிகளின் முழுமையான சம்மதத்துடன் மட்டுமே எடுக்கப்பட வேண்டும்.

ஒருமுறை பிங்க் பந்துடன் விளையாட ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டால், அந்த விதிமுறையானது முழு போட்டிக்கும் மட்டுமே செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.