பாமக வந்தால் தவெக கூட்டணியில் விசிக இருக்காது - எஸ்.எஸ்.பாலாஜி பேட்டி!

 

பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) ஒருபோதும் இருக்காது என அக்கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள எஸ்.எஸ்.பாலாஜி, பாமக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் இருக்கும் இடத்தில் விசிக இருக்க இயலாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தவெக கூட்டணியில் பாமகவை இணைக்க வேண்டும் என்று முடிவு செய்தால், அது விசிகவுக்கு இடமில்லை என்று அர்த்தம் கொள்வதாகவே அமையும் என்றார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போதே பாமக திமுக கூட்டணிக்கு வரவிருப்பதாகப் பேச்சுக்கள் அடிபட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், தவெகவும் பாமகவைச் சேர்க்காத என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.