சதுர்த்தி திதியில் இதை செய்து வந்தால்... செல்வ வளமும் ஆயுள் பலமும் கூடும்!

 

எந்த காரியத்தைத் துவங்குவதாக இருந்தாலும், விநாயகரை வழிபடாமல் நாம் செய்வதில்லை. முழு முதற் கடவுள் என்று கணபதியை வணங்குகிறோம். அதனால் தான் சங்க இலக்கியங்களிலும், ஒவ்வொரு நூலிலும், எழுத துவங்கும் முன்பு கடவுள் வாழ்த்து என தனி செய்யுளும், விநாயகர் போற்றி என்றும் துவங்குகிறார்கள். விநாயகர் வழிபாட்டில் சதுர்த்தி திதி ரொம்பவே முக்கியமானது. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இதைத் தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் வாழ்வில் ஆயுள் பலமும், செல்வ வளமும் கூடிக் கொண்டே வரும். செய்யும் காரியங்களில் தடை ஏதும் இல்லாமல் வெற்றிகிட்டும்.

ஓம் எனும் மந்திரத்தின் உருவம் கொண்ட விநாயக பெருமானைத் துதிப்பவர்களுக்கு நன்மைகள் மட்டுமே ஏற்படும். வணங்குபவர்களுக்கு வளங்களை தரும் விநாயக பெருமானை வணங்கும் ஒரு சிறப்புக்குரிய நாள் தான் சங்கடஹர சதுர்த்தி.

சங்கடஹர சதுர்த்தி விரதம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்திற்கு நான்காவது தினம் அல்லது திதியாக வரும். இந்த சதுர்த்தி தினத்தன்று சமைத்த உணவுகளைத் தவிர்ப்பது உத்தமம். பால், பழங்கள் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயிலில் நடக்கும் சங்கடஹர பூஜையின் போது, விநாயகரின் அபிஷேகத்திற்கு தூய்மையான பசும் பாலை வழங்க வேண்டும். பின்பு விநாயகருக்கு நடக்கும் அபிஷேகங்களையும், பூஜையையும் கண்குளிர கண்டு வணங்க வேண்டும். வீடு திரும்பியதும் பூஜையறையில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலை, படத்தை வணங்கி உங்கள் தேவைகளைச் சொல்லி பிரார்த்தனை செய்து சங்கடஹர சதுர்த்தி விரதத்தை முடிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு எக்காரியத்திலும் தடை, தாமதங்கள் இல்லாமல் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் மிகுந்த லாபங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறப்பார்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை சிறிது சிறிதாக உயரும். வீட்டில் அனைத்து மங்களங்களும் உண்டாகும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்