undefined

ஐஐடி விடுதி அறையில் மாணவி தற்கொலை முயற்சி... சென்னையில் பரபரப்பு!

 

சென்னை ஐஐடி வளாகத்தில் எம்டெக் படிக்கும் மாணவி, கிருமிநாசினி திரவமான ‘டெட்டால்’ குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமாரி (25), சென்னை ஐஐடியில் எம்டெக் படித்து வருகிறார். அவர் கடந்த நான்கு மாதங்களாக சொர்ணமுகி விடுதியில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்ததால் மன அழுத்தத்தில் இருந்ததாக சக மாணவிகள் தெரிவித்தனர்.

நேற்று அதிகாலை, சிவகுமாரி விடுதி பாத்ரூமில் இருந்த கிருமிநாசினி திரவத்தை (Dettol) குடித்து தனது அறைக்கு திரும்பியதாகவும், பின்னர் தனது தோழி சூர்யாவிடம் “நான் டெட்டால் குடித்துவிட்டேன்” என்று கூறியதாகவும் தெரிகிறது.

அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். குடும்பத்திலிருந்து பிரிவு, கல்வி அழுத்தம் அல்லது பிற காரணங்களால் இந்த தற்கொலை முயற்சி ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?