ஐஐடி மாணவர் தற்கொலை... விசாரணை கோரி மாணவர்கள் தொடர் போராட்டம்!

 

மும்பை ஐஐடி கல்வி வளாகத்தில் தேர்வில் காப்பியடித்ததாகக் கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐடி பாம்பேயில் பயின்று வந்த மாணவர் ஒருவர், முந்தைய தேர்வின் போது காப்பியடித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்தத் மன அழுத்தத்தைக் தாங்க முடியாத அந்த மாணவர் திடீரெனத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்வி வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/6VjUNZPW1GI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/6VjUNZPW1GI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

மாணவரின் அகால மரணத்திற்கு உரிய முறையில் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் மனநலப் பாதுகாப்பை நிர்வாகம் முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தொடர்புடைய கல்வி நிறுவன அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.