ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இளையராஜாவுக்கு கௌரவம்! 50 ஆண்டுகால இசைப் பயணத்தை போற்றும் நினைவு அஞ்சல் தலை”

 

 

இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தைப் போற்றும் வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நாடாளுமன்றத்தில் அவருக்கு சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.விக்டோரியா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளையராஜாவின் ஐந்து தசாப்த கால திரையிசைப் பயணத்தை நினைவுகூரும் வகையில் ceremonial commemorative stamp வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் விக்டோரியா அரசின் நிதி அமைச்சர் என்வர் எர்டோகன் எம்.பி. மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

allowfullscreen

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சிறிய கிராமத்தில் பிறந்து ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கவுரவம் பெறுவது உண்மையிலேயே நெகிழ்ச்சியளிப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில், கவுரவத்தை வழங்கிய விக்டோரியா அரசுக்கும், அமைச்சர் என்வர் எர்டோகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், தனது இசைக்கு உயிரூட்டிய கலைஞர்கள், தன்னுடன் பயணித்த இசைக் கலைஞர்கள் மற்றும் தலைமுறை தலைமுறையாக தனது இசையை வரவேற்ற ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப் பயணத்தை முன்னிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ள இந்த கவுரவம் அவரது சர்வதேச இசைப் பயணத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்துள்ளது.