ஒரே மேடையில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, அனிருத் கச்சேரி - ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு!
சென்னையில் தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்திற்குப் புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கில், பிரம்மாண்ட இசைக் கச்சேரிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்திற்காகப் புதிய கட்டடம் கட்ட நிதி திரட்டுவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த பிரம்மாண்டமான இசைக் கச்சேரிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, அனிருத், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களை ஒரே மேடையில் ஒருங்கிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரும் ஒரே மேடையில் இணைந்து கச்சேரி செய்யவுள்ள தகவல், இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.