“எனக்கு விலை பேசி ரேட் பிக்ஸ் பண்ணாங்க!” - பிக்பாஸ் பிரபலம் அதிர்ச்சி - சினிமாவுல ‘காஸ்டிங் கவுச்’ பயங்கரம்!

 

சினிமா உலகில் நீண்ட காலமாகப் புரையோடிப் போயிருக்கும் ‘காஸ்டிங் கவுச்’ குறித்து, பிக்பாஸ் பிரபலம் நைனிகா அனசூரு உடைத்துள்ள உண்மைகள் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நைனிகா, தான் திரைத்துறையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். "ஒரு நாள் எனக்கு நெருக்கமான ஒருவர் ஒரு தகவலைச் சொன்னார். சமூக வலைதளங்களில் எனது புகைப்படங்களைப் பகிர்ந்து, எனக்கு ஒரு 'விலை' நிர்ணயிக்கப்பட்டு வைரலாகி வருவதாகக் கூறினார். இதைக் கேட்டு நான் நிலைகுலைந்து போனேன்" என வேதனையுடன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபருக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், தனது அனுமதி இன்றி இப்படி ஒரு இழிவான செயல் நடந்திருப்பது தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் கூறினார். 

திரைத்துறையில் தற்போது நிலவும் சூழல் குறித்துப் பேசிய அவர், "இப்போது பட வாய்ப்புக்காக நேரடியாகவே 'கமிட்மெண்ட்' கேட்கும் கலாசாரம் அதிகரித்துவிட்டது. திறமையை விடத் தரம் தாழ்ந்த சமரசங்களையே சிலர் எதிர்பார்க்கிறார்கள்" என்றார். 

இந்தக் கசப்பான அனுபவங்களால் விரக்தியடைந்த நைனிகா, "நிச்சயமாக எனது மகளை இந்தத் திரையுலகிற்கு அனுப்ப மாட்டேன்" என அதிரடியாகத் தெரிவித்தார். ஒரு தாயாகவும், ஒரு கலைஞராகவும் அவர் எடுத்துள்ள இந்த முடிவு, திரைத்துறையில் பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பு அற்ற சூழலை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.