"நான் ஒன்னும் பிச்சை எடுக்கல.. என்னை ஏன் டம்மியா நிக்க வெச்சீங்க?": நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்!
'ஆல் பாஸ்' திரைப்பட நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சூர்யா நடிப்பில் வெளியான 'கங்குவா/கருப்பு' திரைப்படத்தில் தனது காட்சிகள் வெட்டப்பட்டது குறித்தும், திரைத்துறையில் நடக்கும் புறக்கணிப்புகள் குறித்தும் மிகக் காட்டமாகப் பேசியுள்ளார்.
"நான் தான் உண்மையான கருப்பன். 'கருப்பு' படத்தில் ரிங் மேலே நின்று பாட்டில்களை வீசிக்கொண்டு கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடினேன். ஆனால் படத்தில் எனது ஒரு காட்சியைக் கூட வைக்காமல் முழுமையாகத் தூக்கிவிட்டார்கள். சூர்யாவுக்கு இவ்வளவு பில்டப் கொடுக்கும்போது, எனது 2 முதல் 4 நிமிட காட்சிகளையாவது வைத்திருக்கலாம்" எனக் குமுறினார்.
"350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவன் நான். இவர்களெல்லாம் அரைக்கால் டிராயர் போடும்போதே தயாரிப்பாளரானவன். நான் ஒன்றும் பிச்சை எடுக்கவில்லை, என்னை ஏன் இப்படி டம்மியாக நிற்க வைக்கிறீர்கள்? எனது காட்சிகள் நீக்கப்பட்டதைப் பற்றி என் மகன்கள் கேட்கும்போது நான் என்ன பதில் சொல்வது?" என கேள்வி எழுப்பினார்.
படங்கள் வெற்றிபெற உழைக்கும் எடிட்டர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் மற்றும் துணை நடிகர்களின் பெயர்கள் போஸ்டர்களில் மிகச்சிறிய எழுத்துகளில் ஓரம் கட்டப்பட்டு, ஹீரோக்களின் பெயர்கள் மட்டுமே பிரம்மாண்டமாகப் போடப்படுவதாகச் சாடினார்.
தனது மகன் செய்த ஒரு சிறு தவறை இன்னும் பிடித்துக்கொண்டு, சமூக வலைதளங்களில் தன்னையும் தனது மகனைப் பற்றியும் ஒரு கூட்டம் தொடர்ந்து தவறாகப் பேசி வருவதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.