“தவெகவுக்குப் பெயர் வைத்தது நான்தான்!” - ஜோதிடர் ரத்தன் பண்டிட்
Aug 21, 2026, 12:15 IST
வெற்றி தனியார் தொலைக்காட்சி இலட்சினை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபல ஜோதிடர் ரத்தன் வெற்றிவேல் பண்டிட், தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்குத் தான் பெயர் வைத்ததாகத் தெரிவித்துள்ளார்.
எண்கணித முறைப்படி 22-வது எண்ணில் வரும் 'வெற்றி' என்ற வார்த்தையை இணைத்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரைத் தானே தேர்வு செய்து வைத்ததாக அவர் கூறியுள்ளார்.
புதிய தனியார் தொலைக்காட்சியின் இலட்சினையையும் விஜய்க்குப் பொருந்தக்கூடிய நிறத்திலேயே வடிவமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தான் தேர்வு செய்து கொடுத்த பெயரிலேயே கட்சி தொடங்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இன்று விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளதாகவும் அக்கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.