தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்கள் என மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல்., தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களான மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை. ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது:

இது தவிர ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வானிலை முன்னறிவிப்பைக் கவனித்துத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.