இன்று தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!
Nov 16, 2026, 08:15 IST
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.