சென்னையில் 66 இடங்களில் இருந்து 47.62 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் அகற்றம்... கொடுங்கையூரில் எரித்து அழிப்பு! 

 

சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று நகரின் 66 இடங்களில் இருந்து 47.62 மெட்ரிக் டன் பழைய மற்றும் தேவையற்ற பொருட்கள் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்தில் எரித்து அழிக்கப்பட்டன.

பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் 66 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டன. இந்தப் பணிகளுக்காக 23 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. சேகரிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டன.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்ற விரும்பினால், கீழ்க்கண்ட வழிகளில் முன்கூட்டியே பதிவு செய்து மாநகராட்சியின் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்: ‘நம்ம சென்னை’ செயலி மூலமாகவும், உதவி எண்: 1913 மூலமாகவும், வாட்ஸ்அப் எண்: 94450 61913 மூலமாகவும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.