“எங்கள் இதயங்களில் CM.. நாளை நீங்க தான் PM..” வைரலாகும் அமைச்சர் சரத்குமாரின் வீடியோ!

 

சட்டமன்றத்தில் நடைபெற்ற மானியக் கோரிக்கை பதிலுரையின் போது உரையாற்றிய மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை "நாளை நீங்கள்தான் நாட்டின் பிரதமர்" என நெகிழ்ச்சியுடன் புகழாரம் சூட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் திறமையான நிர்வாகத்தையும் உழைப்பையும் பாராட்டிய அமைச்சர், அவர் நடிப்பில் வெளியான 'நாளை தீர்ப்பு', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'குஷி', 'தலைவா', மற்றும் 'சர்கார்' ஆகிய திரைப்படங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுத் தனது பேச்சில் சுவாரஸ்யமாக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

allowfullscreen

"எங்கள் இதயங்களில் என்றும் முதலமைச்சராக வீற்றிருக்கும் நீங்கள்தான், நாளைய நாட்டின் பிரதமராக உருவெடுப்பீர்கள்" என அவர் ஆவேசமாக உரையாற்றினார்.

தமிழக மக்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி, அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழகத்தில் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.