வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு.. அதிர்ச்சியில் வியாபாரிகள்!
Sep 1, 2026, 07:01 IST
சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர் விலையில் மாதத்தின் முதல் நாளான இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 19 கிலோ எடைக் கொண்ட வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 10.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய விலையாக ரூ. 2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்களின் சமையலறைச் செலவைக் கருத்தில் கொண்டு, வழக்கம் போல் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது தொடர்ந்து ரூ. 957.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது.