சுதந்திர தினம், தொடர் விடுமுறை.. தமிழகம் முழுவதும் 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 

ஆகஸ்ட் 15 சுதந்திர தினக் கொண்டாட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் வார இறுதி விடுமுறை நாட்களை ஒட்டி, பயணிகளின் வசதிக்காகத் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது. நாளை ஆகஸ்ட் 14, 15 மற்றும் 16 ஆகிய தொடர் விடுமுறை நாட்களில் இச்சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய முக்கியப் பேருந்து நிலையங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் புறப்படும். சென்னையிலிருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 1,000-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சொந்த ஊர்களுக்குச் சென்ற பயணிகள் மீண்டும் சென்னை திரும்புவதற்காக, ஆகஸ்ட் 16-ஆம் தேதியும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.