உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் உறுதி!
Aug 21, 2026, 18:10 IST
டெல்லியில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபிச்சந்த் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறிப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது. ஆட்டத்தில் உலகின் 4-ஆம் நிலை ஜோடியான சீனாவின் ஜியா யி ஃபான் - ஜாங் ஷு சியான் ஜோடியை இந்திய ஜோடி எதிர்கொண்டது.
முதல் செட்டை இழந்த போதிலும், அபாரமாக மீண்டு வந்த இந்திய ஜோடி 16-21, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபிச்சந்த் ஜோடி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் வெல்வது இதன்மூலம் நிச்சயமாகியுள்ளது.