ஸ்காட்ச் விஸ்கிக்கு 150 சதவீத வரி...  இந்தியத் துறைமுகங்களில் கன்டெய்னர்கள் தேக்கம்!! 

 

 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை 15-ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில், ஸ்காட்ச் விஸ்கி இறக்குமதி வரியில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. ஒப்பந்தப்படி ஸ்காட்ச் விஸ்கிக்கான இறக்குமதி வரி 150 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இருப்பினும், இங்கிலாந்தில் இருந்து மொத்தமாக இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் பாட்டிலில் அடைக்கப்படும் சரக்குகளுக்கு இந்திய சுங்கத்துறை வேறு வகைப்பாட்டின் கீழ் 150 சதவீத வரி விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 80 முதல் 90 கன்டெய்னர் சரக்குகள் இந்தியத் துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

பாட்டிலில் அடைக்கப்படும் விஸ்கிக்கு மட்டுமே சலுகை வழங்கி, மொத்தமாக வரும் சரக்குகளுக்கு 150 சதவீத வரி விதிக்கப்படுவதால் வர்த்தகச் சிக்கல் உருவாகியுள்ளது. ஒப்பந்தத்தின்படி வரிச் சலுகையை முறையாக நடைமுறைப்படுத்த இங்கிலாந்து தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் அவசரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உலக மற்றும் வர்த்தக முக்கியச் செய்திகளைத் தினமாலை.காம் தளத்தில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.