undefined

நாளை இந்தியா - ஜிம்பாப்வே போட்டி... சேப்பாக்கத்தில் அனிருத்தின் இசை - ஐசிசி-யின் மெகா பிளான்!

 

2026 டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான சூப்பர் 8 சுற்றை எட்டியுள்ளது. இதில் சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாளை பிப்ரவரி 26-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முக்கியமான ஆட்டம் நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாலை 6 மணி அளவில் அனிருத்தின் இசை நிகழ்ச்சி தொடங்கும்.

இந்த உலகக்கோப்பை தொடருக்காக அனிருத் பிரத்யேகமாகப் பாடியுள்ள 'FEEL THE THRILL' என்ற பாடலை அவர் மைதானத்தில் நேரடியாகப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார்.

நாளை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் தனது இசையால் அனல் பறக்க விடப்போகிறார்" என ஐசிசி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் ஜுரம் ஒருபுறம், அனிருத்தின் அதிரடி இசை மறுபுறம் என வரும் வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானம் ஒரு மெகா திருவிழாவாக மாறப்போவது உறுதி.