2047-க்குள் இந்தியா ராணுவத் துறையில் முழுமையான தற்சார்பு அடையும் - அமைச்சர் ராஜ்நாத் சிங்

 

டெல்லியில் நடைபெற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டின் ராணுவப் பாதுகாப்புத் துறையில் தற்சார்புக்கான இலக்குகள் குறித்து முக்கியக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ. சார்பில் நடைபெற்ற 'விமர்ஷ் 2026' மாநாட்டில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா முக்கியத் தொழில்நுட்பங்களில் முழுமையான தற்சார்பு அடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதுடன், ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதியையும் பலமடங்கு அதிகரித்து உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியா வலுவானதொரு இடத்தைப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.