பாரதம் பயங்கரவாதத்துக்கு அடிபணியாது... அமித்ஷா ஆவேசம்!
தாக்குதல் நடந்த இடத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு செய்தார்.அங்கிருந்து பேசிய அமைச்சர் “ பாரதம் பயங்கரவாதத்திற்கு அடிபணியாது, யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தப்ப முடியாது” என ஆவேசமாக கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஒட்டு மொத்த தேசத்தையே அச்சுறுத்தியுள்ளது. தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் இந்த இடம் கண்ணுக்கு விருந்தளிக்கக் கூடிய வகையில் காணும் இடமெல்லாம் பச்சை பசேல் என இருக்கும். இந்த அழகிய இயற்கை சூழல் மிகுந்த இடத்தில்தால் பயங்கரவாதிகள் வெறியாட்டம் நடத்தி 26 பயணிகளை சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
பின்னர் தனது எக்ஸ் பதிவில் அமித்ஷா "பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தினேன். பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணிந்து போகாது. இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தப்ப முடியாது" எனப் பதிவிட்டுள்ளார். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் குடும்பத்தினரை சந்தித்து அமித்ஷா ஆறுதல் கூறினார். மேலும் காயம் அடைந்தவர்களிடமும் நலம் விசரித்தார்.
தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு அருகில் பரந்து விரிந்த காடுகள் உள்ளன. எனவே, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அந்த காடுகள் வழியாக மறைந்து பதுங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. பஹல்காமில் தற்போது தேசிய புலனாய்வு முகமை முகாமிட்டு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!