இந்திய விமானப்படையின் 'தரங் சக்தி-2026' கூட்டு ராணுவ பயிற்சி தொடக்கம் - சர்வதேச நாடுகள் பங்கேற்பு!

 

இந்திய விமானப்படையின் சார்பில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் "ஒத்துழைப்பில் வலிமை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு 'தரங் சக்தி-2026' பலதரப்பு கூட்டு ராணுவப் பயிற்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நட்பு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவை மேலும் வலுப்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தவும் இந்தப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த அதிநவீனப் போர் விமானங்கள் மற்றும் முப்படை வீரர்கள் தீவிரமாகப் பங்கேற்றுள்ளனர். நவீன போர் உத்திகளைப் பகிர்ந்து கொள்ளவும், நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த சர்வதேசக் கூட்டுப் பயிற்சி பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.