undefined

இங்கிலாந்தில் மீண்டும் இந்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை !

 

 

இங்கிலாந்தில் இந்தியர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் ஒரு இந்திய வம்சாவளி சீக்கிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானது பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு இந்திய இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பஞ்சாப்பைச் சேர்ந்த அந்த இளம்பெண் இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை வால்சால் நகரில் உள்ள பார்க் ஹால் பூங்கா பகுதியில் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டு கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த ஒருவர், மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் அவரை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், குற்றவாளி தப்பியோடியதைத் தொடர்ந்து தீவிரமாக தேடிவருகின்றனர். அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டு, அவரை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!