2026 ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகள் அறிவிப்பு!

 

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் நடைபெறவுள்ள 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான (2026) 12 நபர்கள் கொண்ட இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறவுள்ளது. நகோயா சிட்டி வர்த்தகம் மற்றும் தொழில் மையத்தில் செப்டம்பர் 21 முதல் 26 வரை கபடி போட்டிகள் நடைபெறும்.

ஆண்கள் அணியில் முன்னணி நட்சத்திர வீரர் பவன் ஷெராவத் மற்றும் அஸ்லம் இனாம்தார் தலைமையில் அர்ஜுன் தேஷ்வால், அஷு மாலிக், தேவங்க் தாலால், அயன் லோச்சப், சுனில் குமார், ஜெய்தீப் தாகியா, ராகுல் சேத்பால், கௌரவ் கத்ரி, சுமித் சங்வான் மற்றும் அங்கித் ஜக்லான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பெண்கள் அணியில் ஆசிய விளையாட்டின் பதக்க வெற்றியாளர்களான ரிது நேகி கேப்டனாகவும், புஷ்பா ராணா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அர்ஜுனா விருது பெற்ற பூஜா காஜ்லா உள்ளிட்ட 12 வீராங்கனைகள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடப்பு சாம்பியனான இந்திய கபடி அணிகள், இம்முறையும் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.