இந்திய ரயில்வே 11,000 கி.மீ ரயில் பாதைகளை நான்கு மடங்காக உயர்த்தத் திட்டம்!
Sep 1, 2026, 19:20 IST
நாட்டின் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தும் வகையிலும், சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் தடையின்றி இயங்குவதை உறுதி செய்யும் நோக்கத்துடனும் இந்திய ரயில்வே துறை சார்பில் புதிய உட்கட்டமைப்பு விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் உள்ள 11,000 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதைகளை நான்கு மடங்காக விரிவுபடுத்தி உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, ரயில்களின் போக்குவரத்துத் தடங்கல் முற்றிலுமாகக் குறைக்கப்பட்டு அதிவேகத்தில் இயக்கப்படும்.
நாட்டின் வளர்ந்து வரும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், பயணிகளின் நீண்ட நேரப் பயணத்தையும் இந்த விரிவாக்கம் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.