ரூபாய் மதிப்பு கடும் சரிவு! டாலருக்கு ரூ.96-ஐ கடந்தது - இறக்குமதி பொருட்களுக்கு சிக்கலா?
Sep 18, 2026, 11:52 IST
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு செப்.17-ம் தேதி ₹96-ஐ கடந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை 0.25 சதவீத புள்ளிகள் உயர்த்தியதுடன், இந்த ஆண்டில் மேலும் ஒரு வட்டி உயர்வுக்கான வாய்ப்பையும் சுட்டிக்காட்டிய நிலையில், டாலர் வலுப்பெற்று ரூபாய் மீது அழுத்தம் ஏற்பட்டது.இதனுடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை ஏற்படுத்தின. செப்.17-ம் தேதி வர்த்தகத்தின் போது ரூபாய் ₹96.10 வரை சரிந்தது.
இந்நிலையில் செப்.18 காலை வர்த்தகத்தில் ரூபாய் ஓரளவு மீண்டது. முந்தைய நாள் ₹95.89-ல் முடிவடைந்த நிலையில், இன்று காலை ₹95.73 ஆக வர்த்தகமானது. உள்நாட்டு பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்தது ரூபாய்க்கு ஆதரவாக அமைந்ததாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.