"இந்த அநீதியை இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள்" - மாணிக்கம் தாகூர் எம்பி ஆவேசம்!

 

மத்திய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவலத்துறை நடத்திய தாக்குதலுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். தடியடி நடத்த அனுமதி அளித்தது யார் என்பது குறித்து மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தி, மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸும் அளித்துள்ளார்.

"டிஜிட்டல் இந்தியா" என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்திற்காகச் சாமானிய மக்களின் பணத்தை வைத்து மோடி அரசு விளையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். "மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் இந்த அநியாயத்தையும் அநீதியையும் இந்திய மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என அவர் சாடியுள்ளார்.