இந்தியாவின் ஜிடிபி 7.8% ஆக உயர்வு - முதல் காலாண்டில் வலுவான வளர்ச்சி!
Aug 31, 2026, 20:00 IST
நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்களில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் முந்தைய மதிப்பீடுகளைக் காட்டிலும் இந்த வளர்ச்சி விகிதம் அதிகமாகப் பதிவாகியுள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
நிதித் துறை, ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் தொழில்முறை சேவைகள் போன்ற பல்வேறு முக்கியத் துறைகளின் சிறப்பான மற்றும் வீச்சான செயல்பாடுகளே இந்த வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.