நடுவானில் குலுங்கிய விமானம்...  திடீரென விமானி அறைக்குள் நுழைந்த பாஜக எம்பி... செம ட்விஸ்ட் வீடியோ!  

 

டெல்லியில் இருந்து பீகார் மாநிலம் பாட்னாவிற்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாகப் பயங்கரமாகக் குலுங்கியுள்ளது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறத் தொடங்கியதோடு பெரும் பதற்றமும் நிலவியது. அந்த விமானத்தில் பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் பிரதாப் ரூடியும் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அனுபவம் வாய்ந்த விமானியாகவும் இருக்கும் எம்பி ரூடியின் இந்தத் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, விமானம் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. தனது உயிரைப் பொருட்படுத்தாமல் சக பயணிகளின் நலனுக்காக அவர் செய்த இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விமானத்தை விட்டு இறங்கிய பயணிகள் அனைவரும் ராஜீவ் பிரதாப் ரூடிக்குக் கைகொடுத்து தங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.