கோவாவில் இருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கம்!

 

கோவாவில் இருந்து 229 பயணிகளுடன் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்ட இண்டிகோ விமானம், திடீர் தொழில்நுட்பக் கோளாறு (என்ஜின் பழுது) காரணமாகப் புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையத்திலேயே பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பாதுகாப்பாக விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டதால், அதிலிருந்த 229 பயணிகளும் எந்தவித காயமுமின்றித் தப்பினர். திடீர் அவசரத் தரையிறக்கத்தால் விமான நிலையப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.