ராட்சத மலைப்பாம்பு மீது ஏறி விளையாடிய 3 குழந்தைகள்... அதிர்ச்சி வீடியோ!
Nov 10, 2026, 21:45 IST
இந்தோனேசியாவில் ராட்சத மலைப்பாம்பின் மீது ஏறி மூன்று குழந்தைகள் விளையாடும் வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.
வீட்டின் பின்புறத்தில் நீண்ட மலைப்பாம்பு படுத்திருக்கும் நிலையில், அதன் உடல் மீது குழந்தைகள் ஏறி சறுக்கி விளையாடுகின்றனர். குழந்தைகளின் தந்தையே இந்தக் காட்சிகளைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். பெரிய மலைப்பாம்புகள் விஷத்தன்மை இல்லாதவையாக இருந்தாலும், அவை இரையை உடலைச் சுற்றி இறுக்கிப் பிடித்து அடக்கும் திறன் கொண்டவை. எனவே, அவற்றுடன் குழந்தைகள் இவ்வாறு விளையாட அனுமதிப்பது ஆபத்தானது என இணையவாசிகள் எச்சரித்து வருகின்றனர்.