தமிழகத்தில் எகிறிய விலைவாசி - பணவீக்கம் 5.92 சதவீதமாக உயர்வு!

 

தமிழ்நாட்டில் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி பணவீக்கம் 5.92 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரியில் 3.36 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம், படிப்படியாக அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் 5.92 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் மாத நிலவரப்படி தேசிய சராசரி பணவீக்கம் 4.82 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் தேசிய சராசரியைக் காட்டிலும் 1.10 சதவீதப் புள்ளிகள் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நிலவும் பணவீக்கமானது கிராமப்புறங்களில் 6.10 சதவீதியாகவும், நகர்ப்புறங்களில் 5.78 சதவீதியாகவும் பதிவாகியுள்ளது.

அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.