"ஆரம்பத்தில் தனுஷ் முரட்டுத்தனமானவர் என நினைத்தேன்" - நடிகை பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்!

 

சின்னத்திரை தொகுப்பாளராக இருந்த காலத்தில் நடிகர் தனுஷ் மீது தனக்கிருந்த தவறான அபிப்பிராயத்தைப் பற்றியும், பின்னர் சினிமா துறைக்குள் வந்த பிறகு அது எவ்வாறு மாறியது என்பதையும் நடிகை பிரியா பவானி சங்கர் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.

தான் செய்தி வாசிப்பாளராகவும் தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றிய காலத்தில், நடிகர் தனுஷை நேர்காணல் செய்ய வாய்ப்பு கிடைத்ததாகப் பிரியா பவானி சங்கர் குறிப்பிட்டார். அந்த நேர்காணலின் போது தனுஷ் மிகவும் ஆர்வமில்லாமலும், சுவாரஸ்யமின்றியும் பதிலளித்ததால், அவர் ஒரு முரட்டுத்தனமான, திமிரான மனிதர் என்றே தான் ஆரம்பத்தில் நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

தான் சினிமாவில் கதாநாயகியாக உருவெடுத்து 'இருமுடி' உள்ளிட்ட திரைப்படங்களின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னரே உண்மை நிலை புரிந்ததாகக் கூறினார். ஒரே கேள்விகளுக்குத் திரும்பத் திரும்பப் பதிலளிப்பதில் உள்ள சோர்வையும் கடினத்தையும் தானே நேரடியாக அனுபவித்த பிறகுதான், அன்று தனுஷ் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்ற சூழ்நிலை தனக்குப் புரிந்ததாகப் பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.