பயனர்கள் உற்சாகம்... பிடிக்காத இன்ஸ்டா ரீல்ஸ்களை ஒரே க்ளிக்கில் மாற்றியமைக்கலாம்!
இன்ஸ்டாகிராம் செயலியில் நாம் பார்க்கும் ரீல்ஸ் வீடியோக்களின் பரிந்துரைகளை நமது விருப்பத்திற்கேற்ப எளிமையாக மாற்றியமைக்க முடியும். நாம் எந்த மாதிரியான வீடியோக்களை அதிகம் பார்க்கிறோமோ, அதை அடிப்படையாகக் கொண்டே இன்ஸ்டாகிராம் அல்காரிதம் புதிய வீடியோக்களை நமக்குத் தொடர்ந்து பரிந்துரைக்கிறது. நமக்கு விருப்பமில்லாத அல்லது தேவையில்லாத வீடியோக்கள் ரீல்ஸில் வந்தால் அதனை நாம் மிக எளிதாக மாற்றி அமைக்கலாம்.
ரீல்ஸ் பார்க்கும் போது நமக்கு விருப்பமில்லாத வீடியோ வந்தால், அதன் வலது ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து 'Not Interested' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மேலும் அந்தப் பக்கத்தில் உள்ள இன்ட்ரெஸ்ட் ஆப்ஷன்களைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான தலைப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தலாம். குறிப்பிட்ட சில கணக்குகளின் வீடியோக்கள் இனி வேண்டாம் என்றால் அவற்றை மியூட் செய்யும் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இது போன்ற தொடர்ச்சியான நடவடிக்கைகளின் மூலம் இன்ஸ்டாகிராம் நமது விருப்பங்களை எளிதாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ற புதிய ரீல்ஸ்களை நமக்குக் காட்டத் தொடங்கும். பயனுள்ள மற்றும் பிடித்தமான பதிவுகளைத் தொடர்ந்து லைக் செய்வதன் மூலம் நமது ரீல்ஸ் ஃபீடை முழுமையாக நமக்குப்பிடித்தமானதாக மாற்றிக்கொள்ள முடியும்