இன்ஸ்டாகிராமில் டீன் ஏஜ் வயதினருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்!
மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராமில் 18 வயதுக்கு குறைவான பயனர்களை பாதுகாப்பதற்காக புதிய கட்டுப்பாட்டு வசதியை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய நடைமுறைப்படி, இந்த டீன் ஏஜ் பயனர்களுக்கு P13 தரமான உள்ளடக்கம் (PG-13) மட்டுமே காட்டப்படும். அதாவது, தவறான, ஆபாசமான வீடியோக்கள், போதை பொருட்கள் தொடர்பான உள்ளடக்கம், அபாயகரமான சண்டைக் காட்சிகள் போன்றவை காட்டப்படாது.
மேலும், பல டீன்கள் தங்கள் வயதை பொய்யாக கூறும் பழக்கமுள்ளதால், மெட்டா நிறுவனம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உண்மையான வயதை கண்டறிய முயற்சிக்கிறது. இதன் மூலம், பாதுகாப்பான மற்றும் பொருத்தமான கன்டென்ட் மட்டுமே டீன்கள் காணும் விதமாக கட்டுப்பாடுகள் அமையும்.
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் இன்ஸ்டாகிராம் கணக்கில் சரியான வயதை குறிப்பது அவசியம் என்று மெட்டா நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது, இதனால் குழந்தைகள் பாதுகாப்பான சமூக ஊடக அனுபவத்தை பெறலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!