சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்... 4 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா சாதனை!
Jul 22, 2026, 17:20 IST
உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 58-வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணி 4 தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் ஜூலை 10 முதல் 19 வரை நடைபெற்ற இப்போட்டியில் 93 நாடுகளைச் சேர்ந்த 363க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற 4 மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே, ஒரு நாட்டின் அணியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
இந்திய மாணவர்களின் இந்த வரலாற்றுச் சாதனைக்குக் கல்வித் துறையினரும், அறிவியல் ஆர்வலர்களும் சமூக வலைத்தளங்களில் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.