ஐபோன் தவணை கட்ட முடியல... மகன், தந்தை, தாய் மலையிலிருந்து குதித்து தற்கொலை... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ! 

 

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் ஐபோன் வாங்கியதற்கான தவணைப் பணம் செலுத்துவது தொடர்பாகத் குடும்பத்தில் கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. குணால் என்ற 18 வயது இளைஞர் ஐபோன் வாங்கிய நிலையில், அதற்கான மாதத் தவணைத் பணத்தைக் கேட்டுப் பெற்றோரிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் தந்தை முரளிதருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உருவாகியுள்ளது.

allowfullscreen

கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய குணால், திசகான் பகுதியில் உள்ள மலையின் விளிம்பில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பெற்றோரும் பொதுமக்களும் மூன்று மணி நேரம் போராடி, ஐபோன் வாங்கித் தருவதாகக் கூறி கெஞ்சியும் அவர் சமாதானமடையவில்லை. தற்கொலை செய்துகொள்வதே ஒரே வழி என்று குணால் பிடிவாதமாக நின்றுள்ளார்.

சமரச முயற்சி தோல்வியடைந்த நிலையில், தந்தை அவரைப் பிடிக்க முயன்றபோது இருவரும் பள்ளத்தாக்கில் விழுந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் சங்கீதாவும் அதே மலையிலிருந்து கீழே குதித்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.