ஐபிஎல் 2027-ல் அதிரடி அணி மாற்றம்... ஹர்திக் பாண்டியா மும்பை அணியில் இருந்து  வெளியேற்றம்! 

 

 

ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனுக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே முக்கிய வீரர்கள் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, டிரேடிங் முறையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறியுள்ளார். அவருக்குப் பதிலாக பஞ்சாப் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

ஐபிஎல் நிர்வாகம் நவம்பர் 11-ம் தேதி இந்த வீரர்கள் பரிமாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன்படி, ஹர்திக் பாண்டியா பஞ்சாப் அணியில் ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையில் இணைகிறார். மும்பை அணியில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த தொகை ரூ.16.35 கோடியாகும். அர்ஷ்தீப் சிங் மும்பை அணியில் தனது முந்தைய ரூ.18 கோடி ஒப்பந்தத் தொகையிலேயே தொடர்கிறார்.

 

2015-ம் ஆண்டு மும்பை அணியில் அறிமுகமான ஹர்திக், 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார். 2024-ல் மீண்டும் மும்பை அணிக்குத் திரும்பி கேப்டன் பொறுப்பையும் ஏற்றார். தற்போது 2027 சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாட உள்ளார்.அதேபோல், 2019-ல் பஞ்சாப் அணியில் அறிமுகமான அர்ஷ்தீப், எட்டு சீசன்களுக்குப் பிறகு மும்பை அணிக்கு மாறியுள்ளார்