ஐ.பி.எல். 2027 மினி ஏலம்: ரூ.2 கோடி அடிப்படை விலையில் ஆவேஷ் கான், தீபக் சாஹர்!
ஐ.பி.எல். 2027 மினி ஏலம் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ள நிலையில், ஏலத்திற்கான ஆரம்ப வீரர்கள் பட்டியலில் இந்திய அணிக்காக விளையாடிய 14 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த 14 வீரர்களின் அடிப்படை விலை விவரங்கள் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.
ஆவேஷ் கான் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரும் தலா ரூ.2 கோடியை அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். ஆகாஷ் தீப், ஜெய்தேவ் உனட்கட், துஷார் தேஷ்பாண்டே மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ரூ.1 கோடி அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர்.
தீபக் ஹூடா, கருண் நாயர், குல்தீப் சென், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, சாரன்ஷ் ஜெயின், சிவம் மாவி மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் தலா ரூ.75 லட்சம் அடிப்படை விலையில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.இந்த வீரர்களை எந்தெந்த அணிகள் போட்டி போட்டு வாங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது