கோவாவில் ஐபிஎல் மினி ஏலம்.. முக்கிய அப்டேட்... நவ.15 வரை கெடு! 

 

ஐபிஎல் 2027 கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்து 3 ஆண்டுகளாக வெளிநாடுகளில் ஏலம் நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவிலேயே ஏலம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் இறுதிப் பட்டியலை நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பிசிசிஐ-யிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அணிகள் தங்கள் பட்டியலைச் சமர்ப்பித்த பிறகு, ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியிடமும் எவ்வளவு இருப்புத் தொகை உள்ளது என்பது தெரியவரும். அதன் பின்னர், ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுப் போட்டி அணிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். அணிகள் தங்களுக்கான வீரர்களைத் தேர்வு செய்து அணியை வலுப்படுத்த இந்த மினி ஏலம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.