ஐபிஎல் 2026... 33 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி! 

 

ஐதராபாத்தில் நேற்று (மே 6) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. அந்த அணியில் கிளாசன் 69 ரன்களும், இஷான் கிஷன் 55 ரன்களும் எடுத்துப் பலம் சேர்த்தனர்.

இதனையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி தனது பேட்டிங்கைத் தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த போதிலும், கூப்பர் கானொலி  தனி ஆளாகப் போராடி சதம் விளாசினார். அவர் 59 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் குவித்து மிரட்டினார். இருப்பினும் மற்ற வீரர்களின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இறுதியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஐதராபாத் அணி, தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் முக்கியப் புள்ளிகளைப் பெற்றது. ஐதராபாத் தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஷிவாங் குமார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வழிவகுத்தனர். கூப்பரின் அதிரடி சதம் ரசிகர்களை உற்சாகப்படுத்திய போதிலும், அணியின் தோல்வியால் அது வீணானது பஞ்சாப் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டநாயகனாக ஐதராபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.