Breaking!! புறப்பட்ட சில நொடிகளில் வெடித்த விமான டயர்! உடைந்த கேபின் கூரை... அலறிய பயணிகள்... பகீர்  வீடியோ!

 

 

 

ஈரானில் புறப்பட்ட சில நொடிகளிலேயே போயிங் 737 விமானத்தின் டயர் பழுதடைந்ததால் ஏற்பட்ட அதிர்வில், விமானத்தின் கேபின் கூரைப் பகுதி உடைந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். 

செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம் ஈரானின் மஷாத் விமான நிலையத்திலிருந்து கெர்மான்ஷாவை நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் ஒரு டயர் கழன்று அல்லது வெடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் காரணமாக இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு விமானம் கடுமையாக அதிரத் தொடங்கியதாக கூறப்படுகிறது. விமானி உடனடியாக அவசரநிலையை அறிவித்து மீண்டும் மஷாத் விமான நிலையத்துக்கு விமானத்தை திருப்பினார்.

allowfullscreen

 விமானம் திரும்பி வரும் நேரத்தில் ஏற்பட்ட கடுமையான அதிர்வால், கேபினின் மேற்கூரை லைனிங் மற்றும் சில உள்பகுதிகள் உடைந்து கீழே விழுந்தன. மேல்புற பொருள் வைக்கும் பெட்டிகளும் திறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் பயணிகள் அச்சத்தில் அலறியதுடன், சிலர் பிரார்த்தனை செய்த காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோவில் கேபினின் சில பகுதிகள் சேதமடைந்திருப்பது தெரிகிறது.

 அவசரமாக திரும்பிய போயிங் 737 விமானம் மஷாத் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானத்தின் டயர் பழுதுக்கும் பின்னர் ஏற்பட்ட இன்ஜின் கோளாறுக்கும் இடையிலான தொடர்பு உள்ளிட்ட தொழில்நுட்ப காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.