“அமெரிக்காவின் எந்த தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுக்கப்படும்” - ஈரான் கடும் எச்சரிக்கை!

 

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா பகுதிகளில் இயங்கி வந்த ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இதற்கு ஈரான் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு முரணானது என்றும், இது வன்முறையைத் தூண்டும் செயல் என்றும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் இந்தச் செயலுக்கு உடனடிப் பதிலடியாக, ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் அங்குள்ள கப்பல்கள் மீது ஈரான் தரப்பில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து வரும் அமெரிக்காவின் எந்தவொரு ராணுவ நடவடிக்கைகளுக்கும் உரிய முறையிலும், பலமாகவுமான பதிலடி தொடரும் என ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.