போரை நிறுத்த  3 நிபந்தனைகள்... ஈரான் அதிபர் கடும் எச்சரிக்கை! 

 

ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். போரை முடிவுக்கு கொண்டு வர மூன்று முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே சமாதானம் ஏற்படும் எனக் கூறியுள்ளார். 

அதன்படி முதல் நிபந்தனையாக,

 ஈரானின் இறையாண்மை மற்றும் நியாயமான உரிமைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் 

இரண்டாவது நிபந்தனையாக, போரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்  

மூன்றாவது நிபந்தனையாக, எதிர்காலத்தில் ஈரான் மீது எந்தவிதமான தாக்குதலும் நடத்தப்படாது என்ற பாதுகாப்பு உத்தரவாதம் வழங்க வேண்டும்

எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஏற்காவிட்டால் போர் தொடரும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது