ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்... மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரிப்பு!

 

மத்திய கிழக்கு பகுதியில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் பகைமை தற்பொழுது பெரும் போராக மாறும் சூழல் உருவாகி உள்ளது. லெபனான் மற்றும் ஈரான் எல்லையை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடுமையான வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்த திடீர் தாக்குதலால் ஈரானின் முக்கிய எரிசக்தி மையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வான்வழி தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. தாக்குதலை தொடர்ந்து ஈரானில் உள்ள முக்கிய நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் அரசு கடுமையான கண்டனங்களை தெரிவித்து மறுதாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய எண்ணெய் கிணறுகளை குறிவைத்து பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளின் மோதல் காரணமாக ஒட்டுமொத்த உலக நாடுகளும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளன.